கோட்டாவுக்கு பிணை; வெளிநாடு செல்லத் தடை

🕔 September 30, 2016

Gottabaya rajapaksa - 866முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலபிடிய இன்று வெள்ளிக்கிழமை பிணை வழங்கினார்.

அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையினால் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம்சாட்டி வழக்கு தாக்கல் செய்திருந்தது

இந்த வழக்கில் பிரதிவாதிகளான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி மற்றும் கடற்படையின் முன்னாள் கட்டளைத் தளபதிகள் மூவர் உள்ளிட்ட எட்டுப் பேர் நீதிமன்றில் ஆஜராகினர்.

இதன்போது, ஒவ்வொருவரையும் தலா 02 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 மில்லியன் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்