விமல் வீரவன்சவின் சகோதரர் கைது 0
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர், இவரைக் கைது செய்துள்ளதாகத் தெரியவருகிறது. அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், இவர் கைதாகியுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றில் இவர் – இன்றைய தினம் ஆஜர் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.