ஜனாதிபதி குடும்ப திருமண நிகழ்வு: சிவப்புச் சால்வையுடன் நாமல்
🕔 September 27, 2016


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் டட்லி சிறிசேனவின் புதல்வியினுடைய திருமண நிகழ்வில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்டமை தொடர்பான செய்தியினையும் படத்தினையும் நேற்று வெளியிட்டிருந்தோம்.
‘ஜனாதிபதியின் தம்பி மகள் திருணத்தில் கோட்டா: ரணில், மைத்திரிக்கு அருகில் இருக்கை’ என அந்தச் செய்திக்குத் தலைப்பிட்டிருந்தோம்.
குறித்த செய்தி வெளியிடப்பட்டு 22 மணித்தியாலங்களில், பல்லாயிரக் கணக்கானவர்கள் பார்வையிட்டுள்ளனர். மட்டுமன்றி, புதிது செய்தித் தளத்தில் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட செய்தியாகவும், மேற்படி செய்தி இடம்பிடித்துள்ளது.
ஜனாதிபதியின் சகோதரர் மகளுடைய திருமண நிகழ்வில், மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.
சிவப்புச் சால்வை அணிந்து கொண்டு, நாமல் இந்தத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டமை கவனிப்புக்குரியது.
மட்டுமன்றி கோட்டாபய ராஜபக்ஷ, தனது மனைவி சகிதம் – மேற்படி திருமணத்தில் கலந்து கொண்டார்.
ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் இந்தத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: ஜனாதிபதியின் தம்பி மகள் திருமணத்தில் கோட்டா: ரணில், மைத்திரிக்கு அருகில் இருக்கை

Comments

