வடக்கு – கிழக்கு இணைப்பு, முஸ்லிம்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும்: சுமந்திரன்

🕔 September 28, 2016

Sumanthiran - 0112டக்கு – கிழக்கு இணைப்பானது, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பூரண சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என்று தாம் கூறி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்

வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்கு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை எனவும் அவர் கூறினார்.

இன்று புதன்கிழமை வவுனியாவில் வைத்து,  வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது 1957 ஆம் ஆண்டு பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் இருந்து வருகின்ற ஒரு நிலைப்பாடு. அந்த ஒப்பந்தத்தில் கூட மாகாண எல்லைகளுக்கு அப்பால் பிராந்திய சபைகள் ஒன்று சேரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்திலும் தெட்டத் தெளிவாக கூறப்பட்டு அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்காரணமாகத்தான் 13ஆவது திருத்தத்திலும், மகாணசபை சட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் இருந்தன. தற்காலிகமாக இணைக்கப்பட்டும் இருந்தது.

வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்க வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.

2010 ஆம் ஆண்டில் இருந்து நாங்கள் முன்வைத்து வருகின்ற எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களில் வடக்கு – கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று தெட்டத் தெளிவாக சொல்லுவதுடன் சேர்ந்து, அந்த இணைப்பானது கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் பூரண சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என்றும் சொல்லியிருக்கின்றோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்