லலித், அனுஷ ஆகியோருக்கு நிபந்தனையுடன் பிணை

🕔 September 20, 2017

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் நிபந்தனையுடனான பிணையினை இன்று புதன்கிழமை வழங்கியுள்ளது.

மேற்படி இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கான தண்டனையினை எதிர்த்து, உச்ச நீதிமன்றில் அவர்கள் மேன்முறையீடு செய்துள்ளனர்.

இந்த நிலையிலேயே, மேன்முறையீட்டு வழக்கு நிறைவடையும் வரையில் தமக்கு பிணை வழங்குமாறு, கொழும்பு மேல் நீதிமன்றில் அவர்கள் கோரியிருந்தனர்.

இதற்கமைவாகவே, அவர்கள் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் 600 மில்லியன் ரூபா பணத்தில் சில் துணிகளை கொள்வனவு செய்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக பகிர்ந்தளித்தார்கள் என்கிற குற்றச்சாட்டில், அவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தமை நினைவு கொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்