அரசாங்கத்தின் புதிய தந்திரத்துக்கு எதிரணி கடும் எதிர்ப்பு; சபை நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு

🕔 September 20, 2017

நாடாளுமன்றில் மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அச்செயற்பாட்டுக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டமை காரணமாக, சபை நடவடிக்கைகள் நண்பகல் 12.00 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டன.

மாகாண சபைத் தேர்தல்களை தந்திரோபாயமாக ஒத்தி வைக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்ட 20ஆவது திருத்தம், அரசாங்கத்துக்குத் தோல்வியைக் கொடுத்துள்ள நிலையில், மற்றொரு சட்டமூலத்தை இன்று புதன்கிழமை சபைக்கு கொண்டு வந்து, அதனை சட்டமாக்கிக் கொள்வதனூடாக மாகாண சபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

இந்த முயற்சிக்கே, தற்போது ஒன்றிணைந்த எதிரணி சபையில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, சபையின் நடுவே எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து, கூச்சல் குழப்பங்களையும் ஏற்படுத்தினர்.

அதனால், சபை நடவடிக்கையை சபாநாயகர் ஒத்தி வைத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்