விமலின் பிணை மனு நிராகரிப்பு

🕔 March 21, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் திருத்தப்பட்ட பிணை மனுவினை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை நிராகரித்தது.

அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், கோட்டே நீதிமன்றம் தன்னை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டமைக்கு எதிராக, விமல வீரவன்ச சார்பில், மேற்படி திருத்தப்பட்ட பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  விகும் கலுஆராய்ச்சி குறித்த மனுவினை நிராகரித்தார்.

கடந்த ஆட்சியில் விமல் வீரவன்ச அமைச்சராகப் பதவி வகித்தபோது, 40 அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டின் பேரில், அவரை நிதிக் குற்றப் பிரிவு கைது செய்தது. 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலேயே இந்த முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் அரசுக்கு 09 கோடி ரூபாய் நஷ்டத்தினை விமல் ஏற்படுத்தியுள்ளதாகவும், குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்