Back to homepage

Tag "உச்ச நீதிமன்றம்"

மேர்வின் இடித்த சுவருக்கு, நஷ்ட ஈடு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

மேர்வின் இடித்த சுவருக்கு, நஷ்ட ஈடு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔22.Jun 2017

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, 04 லட்சம் ரூபாவினை நபரொருவருக்கு நஷ்ட ஈடாகச் செலுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேர்வின் சில்வா அமைச்சராக இருந்தபோது, கிரிபத்கொட பகுதியிலுள்ள நபரொவருவரின் வீட்டுச் சுவரை இடித்தார் எனக் கூறி, பாதிக்கப்பட்ட நபர், உச்ச நீதிமன்றில் மனித உரிமை மீறல் மனுவென்றினை தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கினை

மேலும்...
கீதாவின் மனுவை விசாரிக்க, ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு

கீதாவின் மனுவை விசாரிக்க, ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு 0

🕔19.Jun 2017

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்வதற்காக உச்ச நீதிமன்றில் ஐந்து நீதவான்களைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளமையினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என்று, கீதா குமாரசிங்கவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அவர் தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதற்காகவே, மேற்படி குழு அமைக்கப்பட்டுள்ளது. மனுதாரர்

மேலும்...
தன்னை கைது செய்வதற்கு இடைக்கால தடையுத்தரவு வழங்கக் கோரி, ஞானசார தேரர் மனுத்தாக்கல்

தன்னை கைது செய்வதற்கு இடைக்கால தடையுத்தரவு வழங்கக் கோரி, ஞானசார தேரர் மனுத்தாக்கல் 0

🕔13.Jun 2017

தன்னை கைது செய்வதைத் தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு ஒன்றினைப் பிறப்பிக்க கோரி, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரர், தனது சட்டத்தரணி ஊடாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினை இன்று செவ்வாய்கிழமை தாக்கல் செய்துள்ளார்.இனங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தல் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றத்தடுப்புப் பிரிவினர், முறையான நடவடிக்கையின்றி தன்னை கைது செய்ய முற்படுவதாக தனது மனுவில் ஞானசார

மேலும்...
கீதாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

கீதாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை 0

🕔12.May 2017

கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் கீதா குமாரசிங்க மேன்முறையீடு செய்திருந்தார். குறித்த

மேலும்...
தேசிய அரசாங்கத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

தேசிய அரசாங்கத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி 0

🕔24.Nov 2016

ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் தேசிய அரசாங்கம் இல்லை என உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சட்டத்தரணி அருண லக்சிறி – குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் தேசிய அரசாங்கம் என்பது நாடாளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து நிறுவப்பட வேண்டும் என அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும்...
நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு

நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு 0

🕔15.Nov 2016

நீருக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் ஏதேச்சாதிகார போக்கில், திடீரென நீருக்கான கட்டணம் உயர்த்தப்பட்டமையானது, ஒட்டுமொத்த மக்களினின் அடிப்படை உரிமை மீறலாகும் என நீர்வழங்கல் நீர் விநியோக முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், அந்தச் செயற்பாடானது

மேலும்...
உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில், பெப்ரல் தாக்கல் செய்த மனுவினை விசாரிக்க, உச்ச நீதிமன்றம் அனுமதி

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில், பெப்ரல் தாக்கல் செய்த மனுவினை விசாரிக்க, உச்ச நீதிமன்றம் அனுமதி 0

🕔3.Nov 2016

ஒத்தி வைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் தினத்தை அறிவிக்குமாறு, அரசாங்கத்திற்கு உத்தரவிடக் கோரி, பெப்ரல் அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்ய, உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இன்று வியாழக்கிழமை, குறித்த மனுவினை பரிசீலணைக்கு எடுத்துக் கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்லை நிர்ணய நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள, உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தலை நடத்தும்

மேலும்...
மீள் திருத்தப்பட்ட வற் வரி சட்ட மூலம், அரசியலமைப்புக்கு உட்பட்டது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

மீள் திருத்தப்பட்ட வற் வரி சட்ட மூலம், அரசியலமைப்புக்கு உட்பட்டது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔25.Oct 2016

மீள்திருத்தப்பட்ட  வற் வரி தொடர்பான சட்டமூலமானது, அரசியலமைப்புக்கு உட்பட்டதென நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இன்று செவ்வாய்கிழமை இந்தத் தீர்ப்பினை சபையில் தெரியப்படுத்தினார். மீள் திருத்தப்பட்ட வற் வரி தொடர்பான சட்டமூலம், கடந்த செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஊடாக உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும்...
மரண தண்டனைக்கு எதிராக, துமிந்த சில்வா மேல்முறையீடு

மரண தண்டனைக்கு எதிராக, துமிந்த சில்வா மேல்முறையீடு 0

🕔22.Sep 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மேன்முறையீடு மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஊடாக, துமிந்த சில்வா மேற்படி மனுவினை தாக்கல் செய்துள்ளார். பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட

மேலும்...
பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கு; நாளை தீர்ப்பு

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கு; நாளை தீர்ப்பு 0

🕔7.Sep 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேரின் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை வியாழக்கிழமை வழங்கப்படவுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேர், இந்த வழக்கில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கு கடந்த ஒன்றரை வருடங்கள் தொடர்ச்சியாக  நடந்து வந்துள்ளது. இன்றைய தீர்ப்பு சிறப்பு

மேலும்...
திருத்தப்பட்ட வற் வரி, அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

திருத்தப்பட்ட வற் வரி, அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔9.Aug 2016

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட வற்வரி சட்டமூலத்தில், அரசியலமைப்பின் சரத்துக்கள் பின்பற்றப்படவில்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ‘வற் வரி’ தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் வாசித்தார். இதன்போது, அரசிலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துக்கள், திருத்தப்பட்ட வற் வரி சட்டமூலத்தில் பினபற்றப்பட்டிருக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற

மேலும்...
ஊடகவியலாளரை தம்மிக ரணதுங்க அச்சுறுத்திய வழக்கு, முடிவுக்கு வந்தது

ஊடகவியலாளரை தம்மிக ரணதுங்க அச்சுறுத்திய வழக்கு, முடிவுக்கு வந்தது 0

🕔28.Jul 2016

துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவரும், அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரருமான தம்மிக ரணதுங்க, ஊடகவியலாளர்  ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு, இன்று வியாழக்கிழமை சமரசத்துக்கு வந்தது. இதனையடுத்து, குறித்த வழக்கினை கொழும்பு பிரதம நீதவான் முடிவுறுத்துவதாக அறிவித்தார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரை, கடந்த மார்ச் 16 ஆம் திகதியன்று,

மேலும்...
வற் வரி அதிகரிப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

வற் வரி அதிகரிப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை 0

🕔11.Jul 2016

வற் வரி அதிகரிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. வற் வரியானது 11 வீதமாக இருந்த நிலையில், அதனை 15 வீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது. இதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே, மேற்படி உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. இதேவேளை,

மேலும்...
நாமலுக்கு எதிராக, அவமதிப்பு வழக்கு

நாமலுக்கு எதிராக, அவமதிப்பு வழக்கு 0

🕔30.Jun 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக – லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு நாமல் ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்த போதிலும், அவர் சமூகமளிக்க தவறியிருந்தார். ஆயினும், அது தொடர்பில்

மேலும்...
பஸில் ராஷபக்ஷவின் மனு, உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

பஸில் ராஷபக்ஷவின் மனு, உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு 0

🕔8.Jun 2016

தன்னைக் கைது செய்வதற்கு தடை விதிக்குமாறு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ஐந்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பிரிவினர்எ தம்மை கைது செய்வதற்கு தடை விதிக்குமாறு தனது மனுவில் பஸில் ராஜபக்ஷ வேண்கோள் விடுத்திருந்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்