மேர்வின் இடித்த சுவருக்கு, நஷ்ட ஈடு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

🕔 June 22, 2017

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, 04 லட்சம் ரூபாவினை நபரொருவருக்கு நஷ்ட ஈடாகச் செலுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மேர்வின் சில்வா அமைச்சராக இருந்தபோது, கிரிபத்கொட பகுதியிலுள்ள நபரொவருவரின் வீட்டுச் சுவரை இடித்தார் எனக் கூறி, பாதிக்கப்பட்ட நபர், உச்ச நீதிமன்றில் மனித உரிமை மீறல் மனுவென்றினை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்டவரின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததோடு, வீட்டு சுவரினை உடைத்தமைக்காக 04 லட்சம் ரூபாவினை உரிய நபருக்கு செலுத்த வேண்டுமெனவும் இன்று உத்தரவிட்டது.

இதனையடுத்து, நீதிமன்றில் இன்று ஆஜரான மேர்வின் சில்வா, உரிய நஸ்ட ஈட்டினை இம் மாதம் 27ம் திகதிக்கு முன்னர் கட்டி முடிப்பதாக, நீதிமன்றில் கூறினார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இம் மாதம் 27ம் திகதிக்கு முன்னர்> குறித்த நஸ்ட ஈட்டை கட்டி முடிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சருக்கு உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்