வற் வரி அதிகரிப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

🕔 July 11, 2016

Supreme court - 012ற் வரி அதிகரிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

வற் வரியானது 11 வீதமாக இருந்த நிலையில், அதனை 15 வீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே, மேற்படி உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது.

இதேவேளை, வற் வரி அதிகரிப்பிற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தமையும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்மையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்