பஸில் ராஷபக்ஷவின் மனு, உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

🕔 June 8, 2016

Basil - 976ன்னைக் கைது செய்வதற்கு தடை விதிக்குமாறு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

ஐந்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பிரிவினர்எ தம்மை கைது செய்வதற்கு தடை விதிக்குமாறு தனது மனுவில் பஸில் ராஜபக்ஷ வேண்கோள் விடுத்திருந்தார்.

உச்ச நீதிமன்றில் இன்று புதன்கிழமை குறித்த மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே, அதனை நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பசில்  ராஜபக்ஷ பல முறை கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்