திருத்தப்பட்ட வற் வரி, அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

🕔 August 9, 2016

Supreme court - 012ரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட வற்வரி சட்டமூலத்தில், அரசியலமைப்பின் சரத்துக்கள் பின்பற்றப்படவில்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

‘வற் வரி’ தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் வாசித்தார்.

இதன்போது, அரசிலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துக்கள், திருத்தப்பட்ட வற் வரி சட்டமூலத்தில் பினபற்றப்பட்டிருக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவிற்கு அமைய, வற்வரி அதிகரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்உத நிலையிலேயே உச்சநீதிமன்றம் தனது வியாக்கியானத்தை இன்று வழங்கியுள்ளது.

வற் வரி தொடர்பிலான உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம், ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அதனை சபாநாயகர் இன்று நாடாளுமன்றில் வாசித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்