நாமலுக்கு எதிராக, அவமதிப்பு வழக்கு

🕔 June 30, 2016

Namal - 0865நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக – லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு நாமல் ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்த போதிலும், அவர் சமூகமளிக்க தவறியிருந்தார்.

ஆயினும், அது தொடர்பில் – அவர் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனையடுத்தே, மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்