சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜேதாச செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனு நிராகரிப்பு

🕔 May 16, 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும், பதில் பொதுச் செயலாளராக கீர்த்தி உடவத்தவும் செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (16) நிராகரித்துள்ளது.

இதன்படி, அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும், சட்டத்தரணி கீர்த்தி உடவத்தவை பதில் பொதுச் செயலாளராகவும் நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக கட்சி, அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகள் செயற்படுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இருந்த போதிலும், இந்த மனுவைத் திருத்துவதற்கும், உரிய தடை உத்தரவுக்கான உண்மைகளை உறுதிப்படுத்துவதற்கும் முறைப்பாட்டாளருக்கு வாய்ப்பு உள்ளதாக கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மாவட்ட நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்