கீதாவின் மனுவை விசாரிக்க, ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு

🕔 June 19, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்வதற்காக உச்ச நீதிமன்றில் ஐந்து நீதவான்களைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளமையினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என்று, கீதா குமாரசிங்கவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அவர் தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதற்காகவே, மேற்படி குழு அமைக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பிரதம நீதியரசரால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15ம் திகதி இந்த மனு மீதான விசாரணை இடம்பெறவுள்ளது.

இரட்டை குடியுரிமையை கொண்டுள்ள கீதா பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என, அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராகவே கீதா குமாரசிங்க உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்