கீதாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் கீதா குமாரசிங்க மேன்முறையீடு செய்திருந்தார்.
குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
முன்னதாக, மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கிணங்க, கீதா குமாரசிங்கவின் பதவி வறிதாகி விட்டதாகவும், அது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.