மீள் திருத்தப்பட்ட வற் வரி சட்ட மூலம், அரசியலமைப்புக்கு உட்பட்டது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

🕔 October 25, 2016

Supreme court - 012மீள்திருத்தப்பட்ட  வற் வரி தொடர்பான சட்டமூலமானது, அரசியலமைப்புக்கு உட்பட்டதென நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இன்று செவ்வாய்கிழமை இந்தத் தீர்ப்பினை சபையில் தெரியப்படுத்தினார்.

மீள் திருத்தப்பட்ட வற் வரி தொடர்பான சட்டமூலம், கடந்த செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஊடாக உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

11 வீதமாக இருந்த வற் வரியை 15 வீதமாக அதிகரித்தமைக்கு, கடந்த ஜூலை மாதம் 11ஆம் திகதி உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்