பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கு; நாளை தீர்ப்பு

🕔 September 7, 2016

Baratha laxman - 0111முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேரின் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை வியாழக்கிழமை வழங்கப்படவுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேர், இந்த வழக்கில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு கடந்த ஒன்றரை வருடங்கள் தொடர்ச்சியாக  நடந்து வந்துள்ளது.

இன்றைய தீர்ப்பு சிறப்பு நீதிபதிகள் குழுவினரால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தக் குழுவில் உயர் நீதிமன்ற நீதிபதி சிரான் குணரத்ன தலைமையில், நீதிபதிகளான பத்மினி ரணவக்க மற்றும் எம்.சி.பி.எஸ். மொராயஸ் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர மற்றும் மூன்று மெய்பாதுகாலவர்கள் 08 ஒக்டோபர் 2011 ஆம் ஆண்டு, மேல்மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்ற தினம், அங்கொட பிரதேசத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்