ஊடகவியலாளரை தம்மிக ரணதுங்க அச்சுறுத்திய வழக்கு, முடிவுக்கு வந்தது

🕔 July 28, 2016

Dhammika ranathunga - 092துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவரும், அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரருமான தம்மிக ரணதுங்க, ஊடகவியலாளர்  ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு, இன்று வியாழக்கிழமை சமரசத்துக்கு வந்தது.

இதனையடுத்து, குறித்த வழக்கினை கொழும்பு பிரதம நீதவான் முடிவுறுத்துவதாக அறிவித்தார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரை, கடந்த மார்ச் 16 ஆம் திகதியன்று, உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் வைத்து, தம்மிக ரணதுங்க அச்சுறுத்தினார்.

இவ்வாறு அச்சுறுத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து, தம்மிக ரணதுங்கவுக்கு எதிராக – குறித்த ஊடகவியலாளர் முறைப்பாடு செய்தமையினையடுத்து, இது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஆஜரான தம்மிக்க ரணதுங்கவை மார்ச் 24 ஆம் திகதியன்று கொழும்பு மேலதிக நீதவான் பிணையில் விடுவித்ததோடு, குறித்த வழக்கினை மத்தியஸ்த சபைக்குப் பாரப்படுத்தினார்.

இந்த நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பாரும் சமரசத்துக்கு வருவதாகத் தெரிவித்தமையினை அடுத்து, குறித்த வழக்கினை முடிவுறுத்துவதாக நீதவான் இன்று அறிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்