தேசிய அரசாங்கத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

🕔 November 24, 2016

Judgement - 01ட்சியிலிருக்கும் அரசாங்கம் தேசிய அரசாங்கம் இல்லை என உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறி – குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவில் தேசிய அரசாங்கம் என்பது நாடாளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து நிறுவப்பட வேண்டும் என அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினை இணைத்து நிறுவிய அரசாங்கத்தை, தேசிய அரசாங்கம் எனக் கூறமுடியாது எனவும், மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது தள்ளுபடி செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்