மரண தண்டனைக்கு எதிராக, துமிந்த சில்வா மேல்முறையீடு

🕔 September 22, 2016

Duminda Silva - 087முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மேன்முறையீடு மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஊடாக, துமிந்த சில்வா மேற்படி மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 05 பேருக்கு, கொழும்பு உயர் நீதிமன்றம், கடந்த 08 ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராகவே இன்றைய தினம் துமிந்த சில்வா மேன்முறையீடு செய்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்