நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு

🕔 November 15, 2016

dinesh-gunawardana-097நீருக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் ஏதேச்சாதிகார போக்கில், திடீரென நீருக்கான கட்டணம் உயர்த்தப்பட்டமையானது, ஒட்டுமொத்த மக்களினின் அடிப்படை உரிமை மீறலாகும் என நீர்வழங்கல் நீர் விநியோக முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், அந்தச் செயற்பாடானது சட்டவிரோதமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

நீர்க் கட்டணத்தை உயர்த்தும் பொருட்டு, திறைசேரியின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில்,  நீருக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஊடகமொன்று தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நீர்க் கட்டணத்தை உயர்த்துவதில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேற்கொண்டுள்ள அணுகுமுறை முற்றிலும் தவறானது எனக் கூறப்படுகிறது. மிலேனிய அபிவிருத்தி இலக்குகளில் இலங்கையும் கையொப்பமிட்டுள்ள நிலையில் இவ்வாறு நீர்க்கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பிரகடனத்தில் குடிநீர் உள்ளடக்கப்பட்டுள்ளதால், வர்த்தமானி அறிவித்தல் ஊடாக மட்டும் நீர் கட்டணத்தை உயர்த்த முடியாது என்றும் தினேஸ் குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்