சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு

சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு 0

🕔24.Nov 2023

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக மேல் நிதிமன்றில் விசாரணையில் உள்ள வழக்கு ஒன்றை – இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2016ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் பாரிய வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக குறித்த வழக்கு தொடரப்பட்டது. பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றை விசாரிப்பதற்கு அனுமதியளித்து

மேலும்...
சஜித் பிரேமதாஸ, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு எதிராக, டயானா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சஜித் பிரேமதாஸ, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு எதிராக, டயானா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி 0

🕔24.Nov 2023

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அந்தக் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) தள்ளுபடி செய்துள்ளது. இவர்கள் குறித்த பதவிகளில் நீடிப்பதற்கு இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு ராஜாங்க அமைச்சர் டயானா

மேலும்...
போர் நிறுத்தம் அமுலாகவுள்ள நிலையில், காஸாவின் இழப்புகள் தொடர்பில் அறிவிப்பு

போர் நிறுத்தம் அமுலாகவுள்ள நிலையில், காஸாவின் இழப்புகள் தொடர்பில் அறிவிப்பு 0

🕔24.Nov 2023

காஸாவில் நான்கு நாள் போர் நிறுத்தம் இன்று (24) காலை 7.00 மணிக்கு அமுலுக்கு வரவுள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் அழிவுகள் தொடர்பில் காஸா அரசாங்க ஊடக அலுவலகம் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 14,854 க்கும் அதிகமானோர் காஸாவில் உயிரிழந்துள்ள நிலையில், 3600 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் 15 லட்சம் போர்

மேலும்...
ஹமாஸ் – இஸ்ரேல் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்; பலஸ்தீன் தரப்பில் விடுதலையாகும் ஷோரூக் சலா இப்ராஹிம் துவாயத்: யார் இவர்? ஏன் கைதானார்?

ஹமாஸ் – இஸ்ரேல் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்; பலஸ்தீன் தரப்பில் விடுதலையாகும் ஷோரூக் சலா இப்ராஹிம் துவாயத்: யார் இவர்? ஏன் கைதானார்? 0

🕔24.Nov 2023

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் காரணமாக, விடுவிக்கப்படவுள்ள பலஸ்தீன பெண் கைதிகளில் – ஷோரூக் சலா இப்ராஹிம் துவாயத் என்பவரும் ஒருவராவார். ஜெருசலேமை வசிப்பிடமாகக் கொண்ட ஷோரூக், 2015ஆம் ஆண்டு இஸ்ரேலிய படையினரால் கைது செய்யப்பட்டார். அவர் அல்-அக்ஸா பள்ளிவாசலுக்குச் சென்று கொண்டிருந்த வழியில், அவருடைய ஹிஜாபை அகற்றுவதற்கு சட்டவிரோத

மேலும்...
ஹமாஸ் – இஸ்ரேல்; நான்கு நாள் போர் நிறுத்தம் நாளை காலை தொடங்குகிறது: ஆனாலும் தாக்குதல் தீவிரம்

ஹமாஸ் – இஸ்ரேல்; நான்கு நாள் போர் நிறுத்தம் நாளை காலை தொடங்குகிறது: ஆனாலும் தாக்குதல் தீவிரம் 0

🕔23.Nov 2023

ஹமாஸ் – இஸ்ரேல் தரப்புகளிடையெ செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு இணங்க, நான்கு நாள் போர்நிறுத்தம் நாளை வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி கைதிகளில் முதல் 13 பொதுமக்கள் சிறைபிடிக்கப்பட்டவர்கள் மாலை 4 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள் என்று கட்டார் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பலஸ்தீன்

மேலும்...
காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது: அமைச்சர் மனுஷ

காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது: அமைச்சர் மனுஷ 0

🕔23.Nov 2023

பிரதான உற்பத்திக் காரணியான காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்புக்கு எதிரான செயற்பாடாகும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்தத் தவறை 2024 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் சரி செய்துள்ளதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்தார். காணி உரிமையை முழுமையாக மக்களுக்கு வழங்குவதன்

மேலும்...
அஸ்வெசும: செப்டம்பர் மாத கொடுப்பனவை இன்று தொடக்கம் பெற்றுக் கொள்ளலாம்

அஸ்வெசும: செப்டம்பர் மாத கொடுப்பனவை இன்று தொடக்கம் பெற்றுக் கொள்ளலாம் 0

🕔23.Nov 2023

அஸ்வெசும பயனாளர்களின் செப்டம்பர் மாத கொடுப்பனவுகளை இன்று(23) தொடக்கம் பெற்றுக்கொள்ள முடியுமென நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 13 லட்சத்து 77 ஆயிரம் பயனாளிகள் குடும்பங்களுக்காக 8,571 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஒக்டோபர், நொவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வருட இறுதிக்கு முன்பாக செலுத்திமுடிக்கவுள்ளதாகவும் நிதி ராஜாங்க அமைச்சர்

மேலும்...
தரப் பரிசோதனையில் இவ்வருடம் 115 மருந்துகள் தோல்வி: இவற்றில் அதிகமானவை இந்தியாவிலிருந்து வந்தவை

தரப் பரிசோதனையில் இவ்வருடம் 115 மருந்துகள் தோல்வி: இவற்றில் அதிகமானவை இந்தியாவிலிருந்து வந்தவை 0

🕔23.Nov 2023

தரப் பரிசோதனையில் இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 115 மருந்துகள் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருந்துகள் விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது ஒரு வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான மருந்துகளின் தரத் தோல்விகளாக உள்ளன என்று, அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. தர சோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில், சுமார் 58 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாகும். 45 மருந்துகள் உள்நாட்டில்

மேலும்...
போர் இடைநிறுத்தம் எப்போது எனத் தெரியவில்லை; வெள்ளிக்கிழமைக்கு முன்னர் கைதிகள் விடுதலை இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு

போர் இடைநிறுத்தம் எப்போது எனத் தெரியவில்லை; வெள்ளிக்கிழமைக்கு முன்னர் கைதிகள் விடுதலை இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு 0

🕔23.Nov 2023

போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக – காஸா கைதிகள் எவரும் வெள்ளிக்கிழமைக்கு முன் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது இவ்வாறிருக்க பலஸ்தீன் பகுதி முழுவதும் கடுமையான வான் தாக்குதல்களும் கடுமையான ஷெல் தாக்குதல்களும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் உடன்பட்ட நான்கு நாள் போர் இடைநிறுத்தம் எப்போது தொடங்கும்

மேலும்...
மதங்கள், கலாசாரங்களை நிந்திப்பது இஸ்லாத்துக்கு முரணானது: பரத நாட்டியம் பற்றிய ஹமீட் மௌலவியின் கருத்துக்கு ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

மதங்கள், கலாசாரங்களை நிந்திப்பது இஸ்லாத்துக்கு முரணானது: பரத நாட்டியம் பற்றிய ஹமீட் மௌலவியின் கருத்துக்கு ஜம்இய்யத்துல் உலமா கண்டனம் 0

🕔22.Nov 2023

– அஷ்ரப் ஏ சமத் – பரத நாட்டியம் குறித்து அக்கரைப்பற்றைச் சேர்ந்த மௌலவி அப்துல் ஹமீட் தெரிவித்த அநாகரீகமான கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டனம் தெரிவித்துள்ளது. மதம் மற்றும் கலாசாரங்கள் நிந்திக்கப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானது என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குறிப்பிட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இன்று

மேலும்...
பட்ஜெட்: நேற்றைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை தொடர்பில் நாமல் விளக்கம்

பட்ஜெட்: நேற்றைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை தொடர்பில் நாமல் விளக்கம் 0

🕔22.Nov 2023

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற நிலையில், அதில் தான் ஏன் கலந்துகொண்டு வாக்களிக்கவில்லை என்பதற்கான காரணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ; கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறை வேலைத்திட்டம் இல்லாததாலும்,

மேலும்...
பல கோடி ரூபாய்கள் பெறுமதியான ஹெரோயின், விமான நிலையத்தில் சிக்கியது

பல கோடி ரூபாய்கள் பெறுமதியான ஹெரோயின், விமான நிலையத்தில் சிக்கியது 0

🕔22.Nov 2023

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 10.5 கிலோ ஹெரோயின் – கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதி 270 மில்லியன் ரூபாயாகும். இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் கட்டுநாயக்க விமான சரக்கு முனைய சுங்க அலுவலகம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின்

மேலும்...
அடுத்த வருடம் இரண்டு தேர்தல்கள் நடத்தப்படும்: நாடாளுமன்றில் ஜனாதிபதி உறுதி

அடுத்த வருடம் இரண்டு தேர்தல்கள் நடத்தப்படும்: நாடாளுமன்றில் ஜனாதிபதி உறுதி 0

🕔22.Nov 2023

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (22) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரை நிகழ்த்திய போது, இதனைக் கூறினார். “வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி. எதிராக வாக்களித்தவர்களுக்கும் நன்றி” என

மேலும்...
சனத் நிஷாந்த நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை

சனத் நிஷாந்த நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை 0

🕔22.Nov 2023

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த – இரண்டு வார காலத்துக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடைநிறுத்தம் இன்று ( 22) முதல் அமுலுக்கு வரும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த –

மேலும்...
போர் இடைநிறுத்தத்துக்கு இஸ்ரேல் – ஹமாஸ் உடன்பாடு: கட்டார் மத்தியஸ்தம்

போர் இடைநிறுத்தத்துக்கு இஸ்ரேல் – ஹமாஸ் உடன்பாடு: கட்டார் மத்தியஸ்தம் 0

🕔22.Nov 2023

காஸாவில் நான்கு நாள் போர்நிறுத்தம் மேற்கொள்வதற்கும் இஸ்ரேலில் சிறைபிடிக்கப்பட்ட 50 பேரை விடுவிப்பதற்கும் – இஸ்ரேலும் ஹமாஸும் உடன்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்துக்கு கட்டார் மத்தியஸ்தம் வகிக்துள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கிணங்க இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பலஸ்தீன் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள். ஒப்பந்தம் என்பது போர் நிறுத்தப்படும் என்று அர்த்தமல்ல என்று பிரதமர் நெதன்யாஹு கூறியுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்