தரப் பரிசோதனையில் இவ்வருடம் 115 மருந்துகள் தோல்வி: இவற்றில் அதிகமானவை இந்தியாவிலிருந்து வந்தவை

🕔 November 23, 2023

ரப் பரிசோதனையில் இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 115 மருந்துகள் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருந்துகள் விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது ஒரு வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான மருந்துகளின் தரத் தோல்விகளாக உள்ளன என்று, அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தர சோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில், சுமார் 58 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாகும். 45 மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை, மற்றவை சீனா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்ட மருந்துகளில், சில திரும்பப் பெறப்பட்டுள்ளன, சில பாவனையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளன.

இவை தவிர, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஃப்ளூக்ளோக்சசிலின் மருந்தின் மொத்தம் 35 தொகுதிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. குறிப்பிட்ட மருந்து இரத்மலானையில் உள்ள அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 2017 ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 600 தரக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான 96 தரக்குறைபாடுகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் 2022 ஆம் ஆண்டில் 86 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்தன.

மருந்துகளின் தரக் குறைபாடுகள் காரணமாக இந்த வருடம் அவற்றினைப் பாவித்தவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதோடு, இறப்புகளும் பதிவாகியமை குறப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்