அடுத்த வருடம் இரண்டு தேர்தல்கள் நடத்தப்படும்: நாடாளுமன்றில் ஜனாதிபதி உறுதி

🕔 November 22, 2023

னாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (22) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரை நிகழ்த்திய போது, இதனைக் கூறினார்.

“வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி. எதிராக வாக்களித்தவர்களுக்கும் நன்றி” என அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டார்.

“அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் இரண்டையும் நடத்துவேன். அதன் பிறகு ஏனைய தேர்தல்களை நடத்துவேன்”

“எக்காரணம் கொண்டும் தேர்தல்கள் பிற்போடப்பட மாட்டாது என்றார்” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்