ஹமாஸ் – இஸ்ரேல்; நான்கு நாள் போர் நிறுத்தம் நாளை காலை தொடங்குகிறது: ஆனாலும் தாக்குதல் தீவிரம்

🕔 November 23, 2023

மாஸ் – இஸ்ரேல் தரப்புகளிடையெ செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு இணங்க, நான்கு நாள் போர்நிறுத்தம் நாளை வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி கைதிகளில் முதல் 13 பொதுமக்கள் சிறைபிடிக்கப்பட்டவர்கள் மாலை 4 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள் என்று கட்டார் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பலஸ்தீன் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள், அதே நேரத்தில் உதவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ரஃபா கடவையில் இருந்து காஸாவுக்குள் நுழையும் என்று கட்டார் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அல்-ஷிஃபா வைத்தியசாலையின் பணிப்பாளரை இஸ்ரேல் கைது செய்ததை அடுத்து, உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து வைத்தியசாலையில் உள்ளோரை வெளியேற்றுவதற்கான ஒருங்கிணைப்பை நிறுத்துவதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய கைதிகளின் குடும்பங்கள் விரக்தியை வெளிப்படுத்தி, போர் நிறுத்தத்துக்கான காத்திருப்பு தொடர்வதால், தகவல் இல்லாததால் அரசாங்கத்தை குற்றம் சாட்டுகின்றனர்.

இது இவ்வாறிருக்க, நாளை யுத்த இடைநிறுத்தம் அமுலுக்கு வரவுள்ள நிலையிலும் காஸாவில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. இதில் பல பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

தொடர்பான செய்தி: போர் இடைநிறுத்தம் எப்போது எனத் தெரியவில்லை; வெள்ளிக்கிழமைக்கு முன்னர் கைதிகள் விடுதலை இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்