ஹமாஸ் – இஸ்ரேல் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்; பலஸ்தீன் தரப்பில் விடுதலையாகும் ஷோரூக் சலா இப்ராஹிம் துவாயத்: யார் இவர்? ஏன் கைதானார்?

🕔 November 24, 2023

மாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் காரணமாக, விடுவிக்கப்படவுள்ள பலஸ்தீன பெண் கைதிகளில் – ஷோரூக் சலா இப்ராஹிம் துவாயத் என்பவரும் ஒருவராவார்.

ஜெருசலேமை வசிப்பிடமாகக் கொண்ட ஷோரூக், 2015ஆம் ஆண்டு இஸ்ரேலிய படையினரால் கைது செய்யப்பட்டார்.

அவர் அல்-அக்ஸா பள்ளிவாசலுக்குச் சென்று கொண்டிருந்த வழியில், அவருடைய ஹிஜாபை அகற்றுவதற்கு சட்டவிரோத யூத குடியேற்றவாசியொருவர் முயன்ற போது, அவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சித்தார்.

இதன்போது இஸ்ரேலிய சிப்பாயினால் – அவர் நெருங்கிய தூரத்தில் சுடப்பட்டதில், அவருடைய மார்பு, தோள்பட்டை மற்றும் கழுத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டதன. அவர் இஸ்ரேலிய படையினரின் காவலில் எடுக்கப்படுவதற்கு முன்னர், 30 நிமிடங்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அந்த நேரத்தில் நிராயுதபாணியாக இருந்த, 18 வயது மட்டுமே நிறைந்திருந்த ஷோரூக், சட்ட விரோத குடியேற்றவாசியொருவரைக் குத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போதிய சிகிச்சை அவருக்கு வழங்கப்படவில்லை. அறுவை சிகிச்சைக்கு முன்னர் – நான்கு நாட்கள் அவரின் காயங்களிலிருந்து இரத்தப்போக்கு ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது.

இந்த நிலையில், கொலை முயற்சி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் – அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவரின் ஹிஜாபை கழற்றுவதற்கு முயற்சித்த யூத குடியேற்றவாசிக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்