சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு

🕔 November 24, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக மேல் நிதிமன்றில் விசாரணையில் உள்ள வழக்கு ஒன்றை – இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2016ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் பாரிய வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக குறித்த வழக்கு தொடரப்பட்டது.

பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றை விசாரிப்பதற்கு அனுமதியளித்து – மேற்படி தடையுத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை, மேற்படி இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும்  சமத் மொராயஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்