இஸ்ரேலியர் 13 பேர் உட்பட, 24 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது

🕔 November 24, 2023

காஸாவில் நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், 13 இஸ்ரேலிய பொதுமக்கள் உட்பட 24 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளதாக, யுத்த நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் நாட்டின் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

விடுவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களில் இரட்டை பிரஜாவுரிமை உள்ளோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தாய்லாந்து நாட்டவர் 10 பேரும், பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவரும் விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகளில் உள்ளடங்குகின்றனர்.

செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளிடம் பயணக் கைதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஹமாஸ்-இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள குறைந்தது 39 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

07 வாரப் போருக்குப் பிறகு, நான்கு நாட்கள் யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.

இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் போர் நிறுத்தக் காலத்தில் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முயற்சிப்பது தடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 7 முதல் காஸாவில் 14,800 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில், ஹமாஸின் தாக்குதல்களால் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 1,200 ஆக உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்