போர் நிறுத்தம் அமுலாகவுள்ள நிலையில், காஸாவின் இழப்புகள் தொடர்பில் அறிவிப்பு

🕔 November 24, 2023
இஸ்ரேலிய தாக்குதலால் காஸாவில் மரணித்தவர்களின் உடல்கள் ஒரே குழிக்குள் அடக்கம் செய்யப்படுகின்றன

காஸாவில் நான்கு நாள் போர் நிறுத்தம் இன்று (24) காலை 7.00 மணிக்கு அமுலுக்கு வரவுள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் அழிவுகள் தொடர்பில் காஸா அரசாங்க ஊடக அலுவலகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி 14,854 க்கும் அதிகமானோர் காஸாவில் உயிரிழந்துள்ள நிலையில், 3600 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் 15 லட்சம் போர் இடம்பெயர்ந்துள்ளார்கள்.

பொதுமக்களின் 46,000 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டன. 23,400வீடுகள் சேதமடைந்துள்ளன.

மேலும் 67 பாடசாலைகள் இயங்க முடியாத நிலையில் உள்ளன. 266 பாடசாலைகள் சேதமடைந்துள்ளன என, காஸா அரசாங்க அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை 103 அரசு கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 88 பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், 03 தேவாலயங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அந்த அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Comments