போர் இடைநிறுத்தத்துக்கு இஸ்ரேல் – ஹமாஸ் உடன்பாடு: கட்டார் மத்தியஸ்தம்

🕔 November 22, 2023

காஸாவில் நான்கு நாள் போர்நிறுத்தம் மேற்கொள்வதற்கும் இஸ்ரேலில் சிறைபிடிக்கப்பட்ட 50 பேரை விடுவிப்பதற்கும் – இஸ்ரேலும் ஹமாஸும் உடன்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்துக்கு கட்டார் மத்தியஸ்தம் வகிக்துள்ளது.

இந்த ஒப்பந்தத்துக்கிணங்க இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பலஸ்தீன் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள்.

ஒப்பந்தம் என்பது போர் நிறுத்தப்படும் என்று அர்த்தமல்ல என்று பிரதமர் நெதன்யாஹு கூறியுள்ளார். சண்டை இடைநிறுத்தப்பட்ட பிறகு – இஸ்ரேலிய ராணுவம் அழுத்தம் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தோனேசிய வைத்தியசாலையைச் சுற்றிலும், தெற்கில் உள்ள கான் யூனிஸ் உட்பட காஸா முழுவதும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகள் இரவு முழுவதும் தொடர்ந்தது.

ஒக்டோபர் 7 முதல் காஸாவில் 14,100 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில், ஹமாஸின் தாக்குதல்களால் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 1,200 ஆக உள்ளது.

Comments