அஸ்வெசும: செப்டம்பர் மாத கொடுப்பனவை இன்று தொடக்கம் பெற்றுக் கொள்ளலாம்

🕔 November 23, 2023

ஸ்வெசும பயனாளர்களின் செப்டம்பர் மாத கொடுப்பனவுகளை இன்று(23) தொடக்கம் பெற்றுக்கொள்ள முடியுமென நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

13 லட்சத்து 77 ஆயிரம் பயனாளிகள் குடும்பங்களுக்காக 8,571 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஒக்டோபர், நொவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வருட இறுதிக்கு முன்பாக செலுத்திமுடிக்கவுள்ளதாகவும் நிதி ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும திட்டத்துக்காக புதிதாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதனிடையே முதியோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் அங்கவீனமடைந்தோருக்கான கொடுப்பனவுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்