சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவில் அதிகரிப்பு: கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 159 சதவீதம் உயர்வு

சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவில் அதிகரிப்பு: கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 159 சதவீதம் உயர்வு 0

🕔2.Nov 2023

நாட்டுக்கு ஒக்டோபர் மாதத்தில் 01 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வந்துள்ளனர் என, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2023 அக்டோபர் 01 முதல் 31 வரை 109,199 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் ஒக்டோபரில் பதிவான எண்ணிக்கை 159% அதிகரிப்பாக

மேலும்...
ஜபாலியா அகதிகள் முகாம் பலி எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு: இஸ்ரேலின் தாக்குதலை போர்க்குற்றம் என்கிறது ஐ.நா மனித உரிமைகள் ஆணையம்

ஜபாலியா அகதிகள் முகாம் பலி எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு: இஸ்ரேலின் தாக்குதலை போர்க்குற்றம் என்கிறது ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் 0

🕔2.Nov 2023

காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் நேற்று (31) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 195 என காஸா அரச அலுவலகம் தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 120 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த அலுவலகம் கூறியுள்ளது. இதேவேளை ஜபாலியா அகதிகள் முகம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் போர்க்குற்றமாக இருக்கலாம்

மேலும்...
எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிப்பு

எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிப்பு 0

🕔2.Nov 2023

எச்ஐவி (HIV) தொற்றாளர்கள் 485 பேர் – இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளனர். கடந்த வருடத்தை விட இந்த வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார். “இலங்கையில் 4,100 எச்ஐவி நோய்த்தொற்று இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி

மேலும்...
இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தாக்குதல்களில் ஒவ்வொரு நாளும் 370 பேர் கொலை; மணித்தியாலத்துக்கு 42 குண்டுத் தாக்குதல்: பதற வைக்கும் புள்ளிவிவரங்கள்

இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தாக்குதல்களில் ஒவ்வொரு நாளும் 370 பேர் கொலை; மணித்தியாலத்துக்கு 42 குண்டுத் தாக்குதல்: பதற வைக்கும் புள்ளிவிவரங்கள் 0

🕔1.Nov 2023

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 370 பேர் கொல்லப்படுகின்றனர் என்று அல் ஜசீரா வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீன் சுகாதார அமைச்சு – ஒக்டோபர் 07ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 25ஆம் திகதி வரையில் மரணமானவர்கள் தொடர்பில் வெளியிட்ட பட்டியலை மையப்படுத்தி இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி போர்

மேலும்...
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் 0

🕔1.Nov 2023

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இன்று (01) கிழக்கு மாகாணத்துக்கு வருகை தந்தார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் – அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர் நாளை திருகோணமலையிலுள்ள திருக்கோணேச்சரம் ஆலயத்தில் – பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதுடன், மேலும் பல

மேலும்...
காஸாவிலிருந்து அம்பியுலன்ஸ்கள், முதல் தடவையாக எகிப்துக்குள் நுழைந்தன

காஸாவிலிருந்து அம்பியுலன்ஸ்கள், முதல் தடவையாக எகிப்துக்குள் நுழைந்தன 0

🕔1.Nov 2023

காயமடைந்த பாலஸ்தீனர்களை ஏற்றிச் செல்லும் அம்பியுலன்ஸ்கள் ரஃபா எல்லைக் கடவை வழியாக – காஸாவில் இருந்து முதல் தடவையாக எகிப்துக்குள் நுழைந்துள்ளன. காயமடைந்த 80க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் சிகிச்சைக்காக தமது நாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளதாக எகிப்தின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் கடவைக்கு அருகில் உள்ள எகிப்திய நகரத்தில் கள மருத்துவமனை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும்...
வற் வரி அதிகரிப்பு, மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பில் சஜித் கடும் சாடல்

வற் வரி அதிகரிப்பு, மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பில் சஜித் கடும் சாடல் 0

🕔1.Nov 2023

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) மற்றும் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார். 2024 ஜனவரியில் இருந்து பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை (VAT) 18% ஆக அதிகரிப்பதற்கும், 03 மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணங்களைத் திருத்துவதற்கும் அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் அவர் அதிருப்தி

மேலும்...
தரை வழித் தாக்குதலில் மிகப்பெரும் இழப்பை இஸ்ரேல் நேற்றிரவு சந்தித்தது:  “எதிர்பார்த்தோம்” என்கிறார் பாதுகாப்பு அமைச்சர்

தரை வழித் தாக்குதலில் மிகப்பெரும் இழப்பை இஸ்ரேல் நேற்றிரவு சந்தித்தது: “எதிர்பார்த்தோம்” என்கிறார் பாதுகாப்பு அமைச்சர் 0

🕔1.Nov 2023

காஸாவில் நேற்று (31) இரவு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 09 இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டதாக, அந்த நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது. காஸாவில் தரைவழித் தாக்குதலுக்குப் பிறகு – இஸ்ரேலிய ராணுவம் சந்தித்த மிகப்பெரிய எண்ணிக்கையிலான இழப்பு இதுவாகும். இதன் மூலம் ஒக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகு கொல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தினரின் எண்ணிக்கை 320க்கும் அதிகமாகும்.

மேலும்...
சப்ரகமுவ பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம் 0

🕔1.Nov 2023

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, அந்தப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவுப் பேராசிரியர் எம். சுனில் சாந்த நியமிக்கப்பட்டுள்ளார். நொவம்பர் 02ஆம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில், மூன்று வருடங்களுக்கு – இந்த நியமனத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் தனது இளமாணி (BA

மேலும்...
ஜபாலியா அகதிகள் முகாம் மீதான தாக்குதல்; 50 பேர் பலி; இப்ராஹிம் பியாரி என்ற ஹமாஸ் தளபதியை கொன்றதாக இஸ்ரேல் அறிவிப்பு

ஜபாலியா அகதிகள் முகாம் மீதான தாக்குதல்; 50 பேர் பலி; இப்ராஹிம் பியாரி என்ற ஹமாஸ் தளபதியை கொன்றதாக இஸ்ரேல் அறிவிப்பு 0

🕔1.Nov 2023

காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது நேற்று (31) இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் ஆகக்குறைந்தது 50 போர் கொல்லப்பட்டு, 150 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில், அந்தத் தாக்குதலை மனிதாபிமான குழுக்கள் கண்டித்துள்ளன. காஸாவில் போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்த – உலகத் தலைவர்களுக்கு விமானத் தாக்குதல் ‘விழித்தெழும் அழைப்பாக’ இருக்க வேண்டும் என்று மனிதாபிமான

மேலும்...
நாட்டில் சனத்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்

நாட்டில் சனத்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம் 0

🕔1.Nov 2023

நாட்டில் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்று (01) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதலாவது கட்டிடமாக ஜனாதிபதி செயலகம் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குடிசன மதிப்பீட்டில் தரவு சேகரிப்புக்கு அச்சிடப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்