சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவில் அதிகரிப்பு: கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 159 சதவீதம் உயர்வு

🕔 November 2, 2023

நாட்டுக்கு ஒக்டோபர் மாதத்தில் 01 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வந்துள்ளனர் என, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

2023 அக்டோபர் 01 முதல் 31 வரை 109,199 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் ஒக்டோபரில் பதிவான எண்ணிக்கை 159% அதிகரிப்பாக உள்ளது. மே மாதத்தைத் தவிர, அனைத்து மாதங்களிலும் இந்த ஆண்டு 01 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்தியா 28,222 சுற்றுலாப் பயணிகள், ரஷ்யா 10,629 சுற்றுலாப் பயணிகள், ஐக்கிய ராச்சியம் 8,454 சுற்றுலாப் பயணிகள், ஜேர்மன் 7,548 சுற்றுலாப் பயணிகள் மற்றும் சீனா 6,211 சுற்றுலாப் பயணிகள் என, மேற்படி ஒக்டோபரில் மேற்ப ஐந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் அவுஸ்ரேலியா, மாலைதீவுகள், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.

31 அக்டோபர் 2023 நிலவரப்படி, இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 11 லட்சத்து 25 ஆயிரத்து 455 சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு வந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்