சப்ரகமுவ பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

🕔 November 1, 2023

ப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, அந்தப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவுப் பேராசிரியர் எம். சுனில் சாந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

நொவம்பர் 02ஆம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில், மூன்று வருடங்களுக்கு – இந்த நியமனத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் தனது இளமாணி (BA Hons) பட்டத்தையும், அதே பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் தனது முதுமாணிப் பட்டத்தையும் இவர் நிறைவு செய்துள்ளார்.

தனது கலாநிதிப் பட்டத்தை கொழும்பு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் எம். சுனில் சாந்த பெற்றுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்