ஜபாலியா அகதிகள் முகாம் மீதான தாக்குதல்; 50 பேர் பலி; இப்ராஹிம் பியாரி என்ற ஹமாஸ் தளபதியை கொன்றதாக இஸ்ரேல் அறிவிப்பு

🕔 November 1, 2023
ஜபாலியா அகதிகள் முகாம் மீது – இஸ்ரேல் நடத்திய தாக்குதல்

காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது நேற்று (31) இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் ஆகக்குறைந்தது 50 போர் கொல்லப்பட்டு, 150 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில், அந்தத் தாக்குதலை மனிதாபிமான குழுக்கள் கண்டித்துள்ளன. காஸாவில் போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்த – உலகத் தலைவர்களுக்கு விமானத் தாக்குதல் ‘விழித்தெழும் அழைப்பாக’ இருக்க வேண்டும் என்று மனிதாபிமான குழுக்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை அல் ஜசீரா ஒளிபரப்பு பொறியியலாளர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 19 பேரை இழந்துள்ளார்.

ஜபாலியா தாக்குதலில் இப்ராஹிம் பியாரி என்ற ஹமாஸ் தளபதியை கொன்றதாக இஸ்ரேலிய படை கூறியுள்ளது. அவர் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஒக்டோபர் 7 தாக்குதல் ஈடுபட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

மறுபுறமாக பாலஸ்தீன தொலைத்தொடர்பு நிறுவனமான ‘பல்ரெல்’ (Paltel) – காஸா முழுவதும் மீண்டும் தகவல் தொடர்பு மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 7 முதல் காஸாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 8,525 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் 1,400 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் காஸாவில் தமது ராணுவததினர் 09 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

ஜபாலியா அகதிகள் முகாம் மீது – இஸ்ரேல் நடத்திய தாக்குதல்
ஜபாலியா அகதிகள் முகாம் மீது – இஸ்ரேல் நடத்திய தாக்குதல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்