ஜபாலியா அகதிகள் முகாம் பலி எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு: இஸ்ரேலின் தாக்குதலை போர்க்குற்றம் என்கிறது ஐ.நா மனித உரிமைகள் ஆணையம்

🕔 November 2, 2023

காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் நேற்று (31) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 195 என காஸா அரச அலுவலகம் தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் 120 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த அலுவலகம் கூறியுள்ளது.

இதேவேளை ஜபாலியா அகதிகள் முகம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் போர்க்குற்றமாக இருக்கலாம் என்று, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் 50 பேர் பலியானதாக நேற்று காஸா சுகாதார அமைச்சு தெரித்திருந்தது.

இது காஸாவிலுள்ள மிகப் பெரிய அகதிகள் முகாமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, இந்த முகாமில் சுமார் 116,000 பேர் பதிவு செய்யப்பட்ட அகதிகளாக உள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்