Back to homepage

Tag "நிலநடுக்கம்"

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: 05 மீற்றர் உயரம் கொண்ட சுனாமி தாக்கும் என எச்சரிக்கை

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: 05 மீற்றர் உயரம் கொண்ட சுனாமி தாக்கும் என எச்சரிக்கை 0

🕔1.Jan 2024

ஜப்பானின் மேற்குப் பகுதிகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் இஷிகாவா மற்றும் அருகிலுள்ள மாகாணங்களை இன்று திங்கட்கிழமை (01) நில அதிர்வு தாக்கியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. அவற்றில் ஒரு நில அதிர்வு 7.4 ரிக்டர் அளவுடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து

மேலும்...
இந்தியப் பெருங்கடலில் நான்கு நில நடுக்கங்கள்: இலங்கைக்கு பாதிப்பில்லை

இந்தியப் பெருங்கடலில் நான்கு நில நடுக்கங்கள்: இலங்கைக்கு பாதிப்பில்லை 0

🕔29.Dec 2023

இந்தியப் பெருங்கடலில் 04 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்தியப் பெருங்கடலில் மாலைதீவுக்கு அருகில் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதனால் இலங்கைக்கு பாதிப்புகள் எவையும் இல்லை என,புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர்  நில்மினி தல்தேன தெரிவித்துள்ளார். அமெரிக்க புவியியல் ஆய்வவின் (USGS) படி, முதல் நிலநடுக்கம் 4.8 ரிக்டர்

மேலும்...
ஆப்கானிஸ்தானில் இன்று மற்றொரு நிலநடுக்கம்: பேரழிவு தொடர்கிறது

ஆப்கானிஸ்தானில் இன்று மற்றொரு நிலநடுக்கம்: பேரழிவு தொடர்கிறது 0

🕔11.Oct 2023

மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கங்களில் பல ஆயிரம் மக்கள் பலியான நிலையில், மற்றொரு நிலநடுக்கம் இன்று (11) புதன்கிழமை ஏற்பட்டுள்ளது. 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 05:10 மணிக்கு ஹெராட் நகருக்கு வடக்கே 28 கிமீ தொலைவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில்100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள்

மேலும்...
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 03 ஆயிரத்தை நெருங்குகிறது: சர்வதேச உதவிகளை கோருகிறது ஐ.நா

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 03 ஆயிரத்தை நெருங்குகிறது: சர்வதேச உதவிகளை கோருகிறது ஐ.நா 0

🕔10.Oct 2023

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தின் அளவு பேரழிவு தருவதாகவும், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு ஆதரவை கோருவதாகவும் அகதிகளுக்கான ஐ.நா. ஆணையாளர் அலுவலகம் இன்று (10) செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. “பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் மற்றும் பங்காளர்கள் முக்கியமான உதவிகளை வழங்குவதிலும் நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதிலும் களத்தில் உள்ளனர்”

மேலும்...
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 0

🕔20.Sep 2023

நியூசிலாந்தின் தெற்குப் பகுதியில் இன்று (20) காலை 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் நேரம் காலை 9.14 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கேன்டர்பரி பகுதியில் உள்ள ஜெரால்டின் நகருக்கு வடக்கே 45 கிமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக ‘ஜியோநெற்’ குறிப்பிடுகிறது. இது நியூசிலாந்தை தாக்கிய மிக சக்திவாய்ந்த

மேலும்...
மொராக்கோ நிலநடுக்கம்; குடும்பத்தில் 10 பேரை இழந்த ஹவுடா அவுட்சாஃப்: மொத்த உயிரிழப்பு 02 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல்

மொராக்கோ நிலநடுக்கம்; குடும்பத்தில் 10 பேரை இழந்த ஹவுடா அவுட்சாஃப்: மொத்த உயிரிழப்பு 02 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் 0

🕔10.Sep 2023

மொராக்கோவில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் காரணமாக ஹவுடா அவுட்சாஃப் என்பவர் தனது குடும்பத்தில் 10 பேரை இழந்து துயரத்தில் தவித்து வருகின்றார். “என் குடும்பத்தினரில் 10 பேர் உயிரிழந்துவிட்டனர். இரண்டு நாட்களுக்கு முன்புதான் நான் அவர்களுடன் இருந்தேன். இப்போது அவர்கள் இறந்துவிட்டனர் என்பதை நம்ப முடியவில்லை” என அவர் பிபிசியிடம் வேதனையுடன் கூறியுள்ளார். வட ஆபிரிக்க நாடுகளில்

மேலும்...
மொராக்கோ நிலநடுக்கம்: 1037 பேர் பலி, 1200 பேர் காயம் (update)

மொராக்கோ நிலநடுக்கம்: 1037 பேர் பலி, 1200 பேர் காயம் (update) 0

🕔9.Sep 2023

மொராக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 1,037 பேர் உயிரிழந்துள்ளனர். 1,200 பேர் காயமடைந்துள்ளனர். முன்னர் 632 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 11.11 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 அளவில்

மேலும்...
தென் பசிபிக் கடலில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தென் பசிபிக் கடலில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 0

🕔16.Jun 2023

தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா அருகே இன்று வெள்ளிக்கிழமை 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை, பிரிட்டிஷ் கொலம்பியா அல்லது அலாஸ்காவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும்

மேலும்...
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் 0

🕔25.Apr 2023

இந்தோனேசியா – சுமாத்ரா தீவுகளில் பாரிய நிலநடுக்கமொன்று இன்று (25) அதிகாலை 3.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. 7.3 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடலில் 84 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆயினும் இலங்கைக்கு இதனால் சுனாமி அச்சுறுத்தல்கள் இல்லை என, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மேலும்...
ஹம்பாந்தோட்டை பகுதியில் நிலநடுக்கம்

ஹம்பாந்தோட்டை பகுதியில் நிலநடுக்கம் 0

🕔24.Apr 2023

இலங்கையில் இன்று (24) அதிகாலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டைக்கு அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.4 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவிலுள்ள, கடற்பகுதியில் ஆழமற்ற பிரதேசத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆயினும் இது குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லையென அந்தப்பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும்...
பேருவளை பிரதேசத்தில் நிலநடுக்கம்

பேருவளை பிரதேசத்தில் நிலநடுக்கம் 0

🕔30.Mar 2023

பேருவளை பிரதேசத்தை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் – சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. பேருவளை பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள

மேலும்...
திருகோணமலை உள்ளிட்ட மூன்று பகுதிகளில் நிலநடுக்கம்

திருகோணமலை உள்ளிட்ட மூன்று பகுதிகளில் நிலநடுக்கம் 0

🕔19.Mar 2023

திருகோணமலை, கோமரன்கடவல மற்றும் கிரிந்த ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை சிறியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நில அதிர்வு 3 ரிக்டர் அளவில் உணரப்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. கிரிந்த பிரதேசத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் 2.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அண்மைக்காலமாக, இலங்கையில் இவ்வாறான சிறியளவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
துருக்கி நிலநடுக்கத்தில் இலங்கைப் பெண் பலி: சடலத்தை மகள் அடையாளம் கண்டார்

துருக்கி நிலநடுக்கத்தில் இலங்கைப் பெண் பலி: சடலத்தை மகள் அடையாளம் கண்டார் 0

🕔12.Feb 2023

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி – இலங்கைப் பெண் ஒருவர் மரணித்துள்ளார். இவர் காணாமல் போயிருந்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. 69 வயதுடைய பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் சடலத்தை அவரின் மகள் அடையாளம் காட்டியுள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. கலகெதர பகுதியை சேர்ந்த

மேலும்...
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 500க்கும் அதிகமானோர் பலி

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 500க்கும் அதிகமானோர் பலி 0

🕔6.Feb 2023

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரிய எல்லைக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 04:17 மணிக்கு இந்த நிலை நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக 10 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சிரியாவில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலி எண்ணிக்கை

மேலும்...
ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை 0

🕔16.Mar 2022

ஜப்பானில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிலோ மீற்றர் தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே இன்று இரவு இலங்கை நேரப்படி 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்