ஹம்பாந்தோட்டை பகுதியில் நிலநடுக்கம்

🕔 April 24, 2023

லங்கையில் இன்று (24) அதிகாலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டைக்கு அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.4 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவிலுள்ள, கடற்பகுதியில் ஆழமற்ற பிரதேசத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆயினும் இது குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லையென அந்தப்பணியகம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்