மொராக்கோ நிலநடுக்கம்: 1037 பேர் பலி, 1200 பேர் காயம் (update)
🕔 September 9, 2023



மொராக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 1,037 பேர் உயிரிழந்துள்ளனர். 1,200 பேர் காயமடைந்துள்ளனர். முன்னர் 632 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 11.11 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
முன்னதாக 632 பேர் இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ள அதேவேளை, 329 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நில நடுக்கம் காரணமாக – நாட்டின் மூன்றில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது.
மொராக்கோ கடற்கரையில் உள்ள கேனரி தீவுகள் மற்றும் அதன் கிழக்கு அண்டை நாடான அல்ஜீரியாவில் உள்ள மக்கள் கூட நிலநடுக்கத்தை உணர்ந்ததாக கூறுகிறார்கள்.


TAGS:
நிலநடுக்கம்மொராக்கோ
Comments

