இந்தியப் பெருங்கடலில் நான்கு நில நடுக்கங்கள்: இலங்கைக்கு பாதிப்பில்லை
இந்தியப் பெருங்கடலில் 04 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
இந்தியப் பெருங்கடலில் மாலைதீவுக்கு அருகில் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் இதனால் இலங்கைக்கு பாதிப்புகள் எவையும் இல்லை என,புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேன தெரிவித்துள்ளார்.
அமெரிக்க புவியியல் ஆய்வவின் (USGS) படி, முதல் நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் 10 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளது.
ஏனைய மூன்று நிலநடுக்கங்களும் முறையே 5.2, 5.8 மற்றும் 5.0 ரிக்டர் அளவிவிலும் பதிவாகின.