ஆப்கானிஸ்தானில் இன்று மற்றொரு நிலநடுக்கம்: பேரழிவு தொடர்கிறது

🕔 October 11, 2023
சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்புகள்

மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கங்களில் பல ஆயிரம் மக்கள் பலியான நிலையில், மற்றொரு நிலநடுக்கம் இன்று (11) புதன்கிழமை ஏற்பட்டுள்ளது.

6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 05:10 மணிக்கு ஹெராட் நகருக்கு வடக்கே 28 கிமீ தொலைவில் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில்100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னர் ஏற்பட்ட நிலைநடுக்கத்தில் வீடுகள் அழிக்கப்பட்ட பின்னர் – பலர் திறந்த வெளியில் தூங்கிக் கொண்டிருந்த போது, இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வைகள், உணவு மற்றும் இதர பொருட்களுக்கு பற்றாக்குறையுள்ளதாக உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்பான செய்தி: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 03 ஆயிரத்தை நெருங்குகிறது: சர்வதேச உதவிகளை கோருகிறது ஐ.நா

Comments

புதிது பேஸ்புக் பக்கம்