பேருவளை பிரதேசத்தில் நிலநடுக்கம்

🕔 March 30, 2023

பேருவளை பிரதேசத்தை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று மதியம் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் – சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் கூறியுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.

பேருவளை பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்