துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 500க்கும் அதிகமானோர் பலி

🕔 February 6, 2023

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரிய எல்லைக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 04:17 மணிக்கு இந்த நிலை நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக 10 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சிரியாவில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலி எண்ணிக்கை கடுமையாக உயரும் என அஞ்சப்படுகிறது.

பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன என்றும், பெரும் இடிபாடுகளின் கீழ் உயிர் பிழைத்தவர்களைத் தேட மீட்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்