தலைப்புச் செய்திகள்

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தின் தெற்குப் பகுதியில் இன்று (20) காலை 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூர் நேரம் காலை 9.14 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கேன்டர்பரி பகுதியில் உள்ள ஜெரால்டின் நகருக்கு வடக்கே 45 கிமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக ‘ஜியோநெற்’ குறிப்பிடுகிறது.

இது நியூசிலாந்தை தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் 11 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் இது உணரப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இருந்தபோதிலும் இதனால் சுனாமி ஆபத்து இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.