‘அரகலய’ காலத்தில் சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 1414 மில்லியன் ரூபா நஷ்டஈடு

🕔 September 20, 2023

ட்சியாளர்களுக்கு எதிராக கடந்த வருடம் இடம்பெற்ற‘அரகலய’ எனும் மக்கள் போராட்டத்தின் போது, சேதமாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்காக அரசாங்கம் வழங்க வேண்டிய நஷ்டஈடு 1,414 மில்லியன் ரூபா என அறிக்கைகள் கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதில் 31 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நட்டஈடாக 714 மில்லியன் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 13 எம்.பி.க்களுக்கு முழு இழப்பீடு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மதிப்பிடப்பட்ட தொகை 700 மில்லியன் ரூபாவாகும்.

மேலதிக பண ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கு – ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்