மின் கட்டணம் இன்று நள்ளிரவு தொடக்கம் குறைகிறது

மின் கட்டணம் இன்று நள்ளிரவு தொடக்கம் குறைகிறது 0

🕔30.Jun 2023

மின்சார கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், மின்சார கட்டணங்கள் 14.2 சதவீதத்தினால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வீட்டு பாவனைக்கான மின்சார கட்டணம் 0 முதல் 30 வரையான அலகுகளுக்கு உட்பட்ட பிரிவுக்கு, 65 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளது. இதற்கமைய, அலகொன்றுக்கான கட்டணம், 30 ரூபாவிலிருந்து

மேலும்...
சூரிய சக்தி மின்சார உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்தியுள்ளதாக அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

சூரிய சக்தி மின்சார உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்தியுள்ளதாக அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு 0

🕔30.Jun 2023

சூரிய சக்தியிலிருந்து மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட மின்சாரத்துக்கு ஏப்ரல் 30ஆம் திகதி வரைசெலுத்த வேண்டிய அனைத்து கொடுப்பனவு பாக்கிகளையும் செலுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த 12 மாதங்களாக சூரிய சக்தியிலிருந்து மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து, இலங்கை மின்சார சபை பெற்றுக் கொண்ட

மேலும்...
விமானப் படையின் புதிய தளபதி கடமைகளைப் பொறுப்பேற்றார்

விமானப் படையின் புதிய தளபதி கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔30.Jun 2023

இலங்கை விமானப்படையின் 19வது தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச இன்று (30) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய விமானப்படைத் தளபதி நேற்று புதன்கிழமை (28) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். அவரின் சிறந்த சேவையை பாராட்டி, புதிய நியமனத்தை கருத்தில் கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பரிந்துரையின் பேரில்,

மேலும்...
லேக் ஹவுஸ், ரூபவாஹினி தலைவர்கள் ராஜிநாமா: அமைச்சர் பந்துலவின் நண்பர்கள் வெற்றிடங்களுக்கு விரைவில் நியமனம்

லேக் ஹவுஸ், ரூபவாஹினி தலைவர்கள் ராஜிநாமா: அமைச்சர் பந்துலவின் நண்பர்கள் வெற்றிடங்களுக்கு விரைவில் நியமனம் 0

🕔29.Jun 2023

அரச ஊடக நிறுவனங்களான லேக் ஹவுஸ் (அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஆஃப் சிலோன் லிமிடெட்) மற்றும் ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும், இரண்டு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றிய வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதவிகளைப் பெற முயன்று தோல்வி கண்டவர்களே, எனக்கு எதிராக போலி குற்றச்சாட்டுகளை பரப்புகின்றனர்: உபவேந்தர் றமீஸ் அபூபக்கர்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதவிகளைப் பெற முயன்று தோல்வி கண்டவர்களே, எனக்கு எதிராக போலி குற்றச்சாட்டுகளை பரப்புகின்றனர்: உபவேந்தர் றமீஸ் அபூபக்கர் 0

🕔28.Jun 2023

– நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான் – தன் மீது சமூக ஊடகங்கள் ஊடாக சிலர் சுமத்திவரும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும், காழ்ப்புணர்வு கொண்ட மிகச் சிலர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். தமது சட்ட மீறல்களையும் ஊழல்களையும் மறைக்க முயற்சிப்பவர்களே, தன்மீது இவ்வாறான

மேலும்...
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அனுமதி

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அனுமதி 0

🕔28.Jun 2023

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான யோசனை இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது, குறித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த யோசனை நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற விசேட

மேலும்...
ஹஜ் பெருநாளை அடுத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை: பதில் நாளும் அறிவிப்பு

ஹஜ் பெருநாளை அடுத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை: பதில் நாளும் அறிவிப்பு 0

🕔28.Jun 2023

ஹஜ் பெருநாளையடுத்து சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளைமறுதினம் (30) வெள்ளிக் கிழமையன்றும் விசேட விடுமுறையினை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாளை (29) ஹஜ் பெருநாள் இலங்கையில் கெண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் 30ஆம் திகதி வழங்கப்படும் விசேட விடுமுறைக்கு பதிலீடாக, ஜுலை 8ஆம் திகதி சனிக்கிழமையன்று பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சு

மேலும்...
விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கவுள்ளதாக நீதிமன்றில் அறிவிப்பு

விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கவுள்ளதாக நீதிமன்றில் அறிவிப்பு 0

🕔28.Jun 2023

விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி 60 வயதிற்குட்பட்ட விசேட வைத்தியர்களுக்கு ஓய்வு வழங்க அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடுமாறு கோரி, 176 விசேட வைத்தியர்கள் தாக்கல் செய்த ரிட் மனு

மேலும்...
கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் வைத்தியசாலையில்

கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் வைத்தியசாலையில் 0

🕔28.Jun 2023

நபர் ஒருவர் மீது – கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று (28) காலை துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதில் அவர் காயமடைந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் – காரில் பயணித்த 28வயது நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு

மேலும்...
இலங்கையில் 15 நிமிடங்களுக்கு ஒரு மரணம்; எதனால்?: செய்தியைப் படியுங்கள்

இலங்கையில் 15 நிமிடங்களுக்கு ஒரு மரணம்; எதனால்?: செய்தியைப் படியுங்கள் 0

🕔27.Jun 2023

இலங்கையில் மதுசாரம் மற்றும் புகையிலை பாவனையால் ஏற்படும் நேரடிப் பாதிப்பின் காரணமாக ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு மரணம் ஏற்படுவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றஸாட் தெரிவித்தார். மொத்த மக்கள்தொகையில் 14 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3 மில்லியன் பேர் மதுசாரம் பாவிப்பவர்களாகவும் 2.5 மில்லியன் பேர்

மேலும்...
உள்நாட்டு கடன் மறுசீரப்பினால் ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட எந்தவொரு பொது நிதியிலும் பாதிப்பு ஏற்படாது: ஜனாதிபதி

உள்நாட்டு கடன் மறுசீரப்பினால் ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட எந்தவொரு பொது நிதியிலும் பாதிப்பு ஏற்படாது: ஜனாதிபதி 0

🕔27.Jun 2023

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியிலும் பாதிப்பு ஏற்படாது எனவும், கடந்த காலங்களில் செலுத்தப்பட்ட உயர் ஓய்வூதிய நிதிய விகிதத்தையும் எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மேலும், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பானது நாட்டின் வங்கிக் கட்டமைப்பு அல்லது எந்தவொரு அரச அல்லது

மேலும்...
சிறுவர் பாலியல் குற்றங்கள், நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படாமல், சமாதானம் செய்யப்படுவது கவலைக்குரியது

சிறுவர் பாலியல் குற்றங்கள், நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படாமல், சமாதானம் செய்யப்படுவது கவலைக்குரியது 0

🕔27.Jun 2023

– பாறுக் ஷிஹான் – புலனாய்வுகளின் போது, சந்தேக நபர்களை சித்திரவதைக்குள்ளாக்காமலும் இழிவான நடத்தாமலும் அடிப்படை உரிமையை பொலிஸார் பாதுகாக்க வேண்டும் என, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.வலியுறுத்தினார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச சித்திரவதைக்கு எதிரான தினத்தையொட்டி கல்முனை பிராந்தியத்தலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கான செயலமர்வு

மேலும்...
வேலைவாய்ப்பின் நிதித்தம் வெளிநாடு செல்வோருக்கு தொழிற்பயிற்சி: 23ஆம் திகதி ஆரம்பம்

வேலைவாய்ப்பின் நிதித்தம் வெளிநாடு செல்வோருக்கு தொழிற்பயிற்சி: 23ஆம் திகதி ஆரம்பம் 0

🕔27.Jun 2023

வேலைவாய்ப்பின் நிதித்தம் வெளிநாடு செல்வோருக்கு தொழில் பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய ஜுலை மாதம் முதல் வாரத்தில் விண்ணப்பங்கள் கோரப்படும் என தொழிற் பயிற்சி அதிகார சபை அறிவித்துள்ளது. தொழிற்பயிற்சி அதிகார சபையும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகமும் இதற்கான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டதாக, தொழிற் பயிற்சி அதிகார

மேலும்...
மதங்களை இழிவுபடுத்துகின்றமை குறித்து ஆராய, குழுவொன்றை நியமிக்க தீர்மானம்

மதங்களை இழிவுபடுத்துகின்றமை குறித்து ஆராய, குழுவொன்றை நியமிக்க தீர்மானம் 0

🕔27.Jun 2023

மத சுதந்திரத்தை பறிக்கும் மற்றும் மதங்களை இழிவுபடுத்தும் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. பௌத்த, இஸ்லாமிய, இந்து மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள், சட்ட

மேலும்...
கனடாவுக்கான மாணவர் வீசா தொடர்பில் மோசடி: 05 பெண்கள்  உட்பட 06 பேர் கைது

கனடாவுக்கான மாணவர் வீசா தொடர்பில் மோசடி: 05 பெண்கள் உட்பட 06 பேர் கைது 0

🕔27.Jun 2023

கனடாவுக்கு ‘மாணவர் வீசா’ வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளின் அடிப்படையில், கொழும்பு நிதி குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே – குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கோட்டை நீதவான் நீதிமன்றில் இருந்து தேடுதல் உத்தரவைப் பெற்றுக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்