தென் பசிபிக் கடலில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

🕔 June 16, 2023

தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா அருகே இன்று வெள்ளிக்கிழமை 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை, பிரிட்டிஷ் கொலம்பியா அல்லது அலாஸ்காவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

அவுஸ்ரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும் அவுஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் – ஆரம்பத்தில் ஃபிஜி தீவுகளின் தெற்குப் பகுதிக்கு அருகே நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாக தெரிவித்திருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்