Back to homepage

அம்பாறை

சமூக விடயங்களில் சட்டப் பணியாற்றி வந்த ரத்தீப் அஹமட்: இள வயதில் நீதிபதியாகிறார்

சமூக விடயங்களில் சட்டப் பணியாற்றி வந்த ரத்தீப் அஹமட்: இள வயதில் நீதிபதியாகிறார் 0

🕔27.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – சமூக விடயங்களில் நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக, ஒரு சட்டத்தரணியாக நீண்ட காலம் உழைத்து வந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம்.எஸ். ரத்தீப் அஹமட் – நீதிபதியாக எதிர்வரும் முதலாம் திகதி கடமையினைப் பொறுப்பேற்கவுள்ளார். நீதிபதி தேர்வில் அண்மையில் சித்தியடைந்த ரத்தீப் அஹமட், சட்டத்தரணியாகி 07 வருடங்களுக்குள் நீதிபதியாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 33

மேலும்...
குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ்

குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் 0

🕔26.Nov 2023

– நூருல் ஹுதா உமர் – “குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்” என அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். இளைஞர் கழகங்களில் திறன் விருத்தி வேலைத்திட்டம் எனும் தலைப்பில், மூன்று நாள் பயிற்சி முகாமொன்று நிந்தவூர் அல்-மதீனா வித்தியாலயத்தில் இம்மாதம் 24ம்,

மேலும்...
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து: காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதி

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து: காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதி 0

🕔19.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், இன்று (19) பிற்பகல் 3.45 மணியளவில் இறக்காமம் பிரதான வீதியில் வைத்து, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொத்துவில் உள்ளிட்ட சில பிரதேசங்களில் இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான்,

மேலும்...
அட்டாளைச்சேனையில் மக்கள் எதிர்ப்பு: வருகையை ரத்துச் செய்த கிழக்கு ஆளுநர்; அமைச்சின் செயலாளர் திருப்பி அனுப்பப்பட்டார்; பொலிஸ் வாகனத்தில் பணிப்பாளர் தப்பியோட்டம்

அட்டாளைச்சேனையில் மக்கள் எதிர்ப்பு: வருகையை ரத்துச் செய்த கிழக்கு ஆளுநர்; அமைச்சின் செயலாளர் திருப்பி அனுப்பப்பட்டார்; பொலிஸ் வாகனத்தில் பணிப்பாளர் தப்பியோட்டம் 0

🕔19.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்திய வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (19) திறந்து வைக்கவிருந்த நிகழ்வு, பிரதேச மக்களின் எதிர்ப்புக் காரணமாக ரத்துச் செய்யப்பட்டது. வைத்தியசாலைக்கு முன்பாக – மக்கள் கறுப்பு கொடிகள் மற்றும் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் ஆளுநர் – நிகழ்வில்

மேலும்...
‘அரைகுறை நிலையிலுள்ள வைத்தியசாலைக் கட்டடத்தின் திறப்பு விழாவை நிறுத்து’: கிழக்கு ஆளுநருக்கு எதிராக அட்டாளைச்சேனையில் கறுப்புக் கொடிப் போராட்டம்

‘அரைகுறை நிலையிலுள்ள வைத்தியசாலைக் கட்டடத்தின் திறப்பு விழாவை நிறுத்து’: கிழக்கு ஆளுநருக்கு எதிராக அட்டாளைச்சேனையில் கறுப்புக் கொடிப் போராட்டம் 0

🕔19.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கென நிர்மாணிக்கப்பட்ட புதிய மூன்று மாடிக் கட்டடம் பூரணப்படுத்தப்படாத நிலையில் இருக்கத்தக்கதாக, அதனை இன்று (19) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அப்பிரதேச மக்கள் ‘கறுப்புக் கொடி போராட்டத்தை’ ஆரம்பித்துள்ளனர். மேலும், கட்டட திறப்பு விழாவுக்காக – ஆளுநர்

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலை; குறைபாடுள்ள கட்டடத்தை திறந்து வைப்பதில் அவசரம் காட்டுவது ஏன்: பின்னணியில் ஆளுநரா? பிராந்தியப் பணிப்பாளரா?

அட்டாளைச்சேனை வைத்தியசாலை; குறைபாடுள்ள கட்டடத்தை திறந்து வைப்பதில் அவசரம் காட்டுவது ஏன்: பின்னணியில் ஆளுநரா? பிராந்தியப் பணிப்பாளரா? 0

🕔18.Nov 2023

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்டடத்தில் – பல்வேறு குறைபாடுகளும், நிறைவு செய்ய வேண்டிய தேவைகளும் இருக்கத்தக்க நிலையில், அதனை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கும் அவசர நடவடிக்கையினை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் மேற்கொண்டு வருகின்றமை தொடர்பில், அந்தப் பிரதேச மக்கள் தமது கண்டனங்களை வெளியிடுகின்றனர். குறித்த வைத்தியசாலையை

மேலும்...
பரத நாட்டியத்தை இழிவுபடுத்திப் பேசிய மௌலவிக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் புகார்

பரத நாட்டியத்தை இழிவுபடுத்திப் பேசிய மௌலவிக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் புகார் 0

🕔16.Nov 2023

– மரைக்கார் – பரத நாட்டியம் குறித்து இழிவாகப் பேசிய அக்கரைப்பற்றைச் சேர்ந்த மௌலவி அப்துல் ஹமீட் என்பவருக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (16) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த ‘இந்து – பௌத்த சங்க’ தலைவர் எம். மயூரதன் என்பவர் இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். மௌலவி ஹமீட் என்பவர் –

மேலும்...
முஸ்லிம் – தமிழ் சமூகங்களுக்கிடையில் கசப்பை உருவாக்கும் வகையில், பரத நாட்டியத்தை இழிவாக பேசிய மௌலவி: சட்ட நடவடிக்கை வேண்டும் என அக்கறையாளர்கள் கோரிக்கை

முஸ்லிம் – தமிழ் சமூகங்களுக்கிடையில் கசப்பை உருவாக்கும் வகையில், பரத நாட்டியத்தை இழிவாக பேசிய மௌலவி: சட்ட நடவடிக்கை வேண்டும் என அக்கறையாளர்கள் கோரிக்கை 0

🕔13.Nov 2023

– மரைக்கார் – சமூகங்களுக்கிடையில் பிணக்கையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்தும் வகையில் மௌலவி அப்துல் ஹமீட் என்பவர், சமூக ஊடகங்களில் பரத நாட்டியம் பற்றி, இழிவாக பேசியமைக்கு – முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அக்கரைப்பற்றைச்

மேலும்...
உற்பத்திகளை மேற்கொள்வதற்குப் பதிலாக பொருட்கள், சேவைகளின் விலைகளை அரசாங்கம் அதிகரிக்கிறது: சம்மாந்துறையில் சம்பிக்க குற்றச்சாட்டு

உற்பத்திகளை மேற்கொள்வதற்குப் பதிலாக பொருட்கள், சேவைகளின் விலைகளை அரசாங்கம் அதிகரிக்கிறது: சம்மாந்துறையில் சம்பிக்க குற்றச்சாட்டு 0

🕔6.Nov 2023

– பாறுக் ஷிஹான் – அரசாங்கம் – பொருட்கள் மற்றும சேவைகளின் விலைகளை அதிகரிக்கின்றதே தவிர, உற்பத்திகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என, ஐக்கிய குடியரசு முன்னணிக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவிக்க ஞாயிற்றுக்கிழமை (5)  சம்மாந்துறையில் மக்களை சந்திக்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். நமது

மேலும்...
இரத்த தான நிகழ்வு: அட்டாளைச்சேனையில் நாளை ஏற்பாடு

இரத்த தான நிகழ்வு: அட்டாளைச்சேனையில் நாளை ஏற்பாடு 0

🕔4.Nov 2023

– கே. அப்துல் ஹமீட் – இரத்ததான நிகழ்வொன்று நாளை 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அந்நூர் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் பொருட்டு – இந்த

மேலும்...
1200 மாணவர்களை ஒன்றுதிரட்டவிருந்த அரசியல்வாதிக்கான நிகழ்ச்சி; ரத்துச் செய்யுமாறு, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன்

1200 மாணவர்களை ஒன்றுதிரட்டவிருந்த அரசியல்வாதிக்கான நிகழ்ச்சி; ரத்துச் செய்யுமாறு, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன் 0

🕔31.Oct 2023

– அஹமட் – கல்முனை கல்வி வலயத்திலுள்ள 1200 மாணவர்களை ஒன்று திரட்டி – தனியார் மண்டபமொன்றில் நாளை பாடசாலை நேரத்தில் நடத்தவிருந்த நிகழ்வை நிறுத்துமாறு – கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். அரசியல்வாதியொருவரின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் பொருட்டு, கல்முனை கல்வி வலய

மேலும்...
அரசியல்வாதியின் நிகழ்ச்சி நிரலுக்காக ‘பலி’கொடுக்கப்படும் 1200 மாணவர்கள்: கல்முனை கல்வி வலயத்தில் நடக்கும் ‘ஆபத்தான’ நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை

அரசியல்வாதியின் நிகழ்ச்சி நிரலுக்காக ‘பலி’கொடுக்கப்படும் 1200 மாணவர்கள்: கல்முனை கல்வி வலயத்தில் நடக்கும் ‘ஆபத்தான’ நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை 0

🕔31.Oct 2023

– அஹமட் – அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, கல்முனை வலயத்திலுள்ள 1200 மாணவர்களை – பாடசாலை நேரத்தில் ஒன்று திரட்டி, தனியார் இடமொன்றில் நிகழ்வொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் ‘மாணவர்

மேலும்...
“திருட்டில் ஈடுபடுகின்றவர்களில்  அதிகமானோர், போதைக்கு அடிமையானவர்கள்”: அட்டாளைச்சேனை – மீலாத் நகரில் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டத்தில் தெரிவிப்பு

“திருட்டில் ஈடுபடுகின்றவர்களில் அதிகமானோர், போதைக்கு அடிமையானவர்கள்”: அட்டாளைச்சேனை – மீலாத் நகரில் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டத்தில் தெரிவிப்பு 0

🕔28.Oct 2023

– முன்ஸிப் அஹமட் – திருட்டு வேலைகளில் ஈடுபடுகின்றவர்களில் கணிசமானோர் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹசீப் தெரிவித்தார். திருடர்கள் குறித்து பொதுமக்கள் தமது பிரதேசங்களில் விழிப்பாக இருக்க வேண்டுமென்றும், தங்கள் பகுதிகளில் அசாதாரணமாக உலவுகின்றவர்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்

மேலும்...
கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நிதியை மோசடி செய்து விட்டு, சட்டவிரோதமாக புதிய பஸ்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நிதியை மோசடி செய்து விட்டு, சட்டவிரோதமாக புதிய பஸ்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு 0

🕔27.Oct 2023

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நிதியை, அந்த சபையின் அதிகாரிகள் மோசடி செய்துவிட்டு, தற்போது அரச மற்றும் தனியார் பஸ் வண்டிகளின் ஒருங்கிணைந்த பயண நேர அட்டவணைக்குள் மேலும் பஸ்களை சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, சட்டத்துக்கு முரணாக – புதிதாக அனுமதிப்பத்திரங்களை ஏலத்தில் விநியோகித்து, அதன் வருமானத்தை அரசாங்கத்துக்குக் காண்பிப்பதன் மூலம், அதிகாரிகள் செய்து

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்தின் நிர்வாக துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ‘ரிட்’ மனு தாக்கல்

கல்முனை உப பிரதேச செயலகத்தின் நிர்வாக துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ‘ரிட்’ மனு தாக்கல் 0

🕔27.Oct 2023

கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிவரும் கல்முனை உப பிரதேச செயலகமானது சட்டவிரோதமாக மேற்கொண்டுவரும் அதிகார மற்றும் நிர்வாக துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ‘ரிட்’ எழுத்தானை மனுவொன்று நேற்று (26) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்முனை சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கில் ‘கல்முனையன்ஸ் போரம்’ அமைப்பின் தலைவர் முபாரிஸ் எம். ஹனீபா மனுதாராக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்