Back to homepage

அம்பாறை

கடலில் மூழ்கிய அட்டாளைச்சேனை மாணவன்: தகவல் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை

கடலில் மூழ்கிய அட்டாளைச்சேனை மாணவன்: தகவல் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை 0

🕔3.Oct 2023

ஒலுவில் துறைமுகத்திற்கு அருகாமையில் நேற்று (02) நீராடச் சென்ற அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகக் கொண்ட தரம் 10 படிக்கும் இவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்த நிலையில் இவர் சம்பந்தமான எந்தத் தகவல்களையும் பெற முடியாமல் உள்ளதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். இதேவேளை இவரை தேடும் பணியில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது, எனவே,

மேலும்...
உலக சிறுவர் தினைத்தையொட்டி, கோமாரியில் மாணவர்களை பாராட்டிக் கௌரவித்த மக்கள் வங்கி பொத்துவில் கிளை

உலக சிறுவர் தினைத்தையொட்டி, கோமாரியில் மாணவர்களை பாராட்டிக் கௌரவித்த மக்கள் வங்கி பொத்துவில் கிளை 0

🕔2.Oct 2023

உலக சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையிலும், சிறுவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டும் – கோமாரி மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளைக் கொண்ட நிகழ்வு இன்று (02) இடம் பெற்றன. மக்கள் வங்கியின் பொத்துவில் கிளை அனுசரணையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பாடசாலையைின் அதிபர் ரி.

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: பொதுமக்களுக்காக இரண்டு நாட்கள் திறந்து விடப்படுகிறது

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: பொதுமக்களுக்காக இரண்டு நாட்கள் திறந்து விடப்படுகிறது 0

🕔30.Sep 2023

– சர்ஜுன் லாபீர் – தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தினத்தினை முன்னிட்டும் எதிர்வரும் ஒக்டோபர் 24,25ம் திகதிகளில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். ஒக்டோபர் 24ம் திகதி – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவருமான

மேலும்...
கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினரின் அசட்டைக்கு எதிராக சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம்

கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினரின் அசட்டைக்கு எதிராக சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம் 0

🕔18.Sep 2023

– பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர், எஸ். அஷ்ரப்கான் – சாய்ந்தமருதில் கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினர் கடலரிப்பபைத் தடுப்பதற்கு எனத் தெரிவித்து – பாரிய முண்டுக் கற்களை மீன் பிடி நடவடிக்கைகளுக்காகப் போக்குவரத்து செய்யும் பாதையில் போட்டுவிட்டு, பல நாட்கள் கடந்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைக் கண்டித்து, இன்று (16) மீனவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

மேலும்...
பச்சை சால்வை போட்ட பைத்தியம்; “வராதே, வராதே”: ஹக்கீமுக்கு எதிராக சாய்ந்தமருதில் பொம்மை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

பச்சை சால்வை போட்ட பைத்தியம்; “வராதே, வராதே”: ஹக்கீமுக்கு எதிராக சாய்ந்தமருதில் பொம்மை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔15.Sep 2023

– நூருல் ஹுதா உமர் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக – இன்று (15) ஜும்ஆ தொழுகையின் பின்னர், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக – வீதியை மறித்து பொதுமக்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டதோடு, அவரின் உருவ பொம்மையினையும் எரித்தனர். மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தின நிகழ்வை

மேலும்...
சாய்ந்தமருதில் ‘அஷ்ரப் நினைவு நிகழ்வு’ நடத்துவதில் மு.காவினருக்கு சிக்கல்: “வேறு இடம் பாருங்கள்” என, மண்டப நிர்வாகம் அறிவிப்பு

சாய்ந்தமருதில் ‘அஷ்ரப் நினைவு நிகழ்வு’ நடத்துவதில் மு.காவினருக்கு சிக்கல்: “வேறு இடம் பாருங்கள்” என, மண்டப நிர்வாகம் அறிவிப்பு 0

🕔13.Sep 2023

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பின் நினைவு தினைத்தை அனுஷ்டிக்கும் பிரதான நிகழ்வினை, அந்தக் கட்சியினர் சாய்ந்தமருது லி மெரிடியன் தனியார் மண்டபத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், நிகழ்வை நடத்துவதற்கு வேறு இடமொன்றினை பார்க்குமாறு – மண்டபத்தை பதிவு செய்தோருக்கு மண்டப நிருவாகத்தினர் அறிவித்துள்ளனர். மண்டபத்தின் பிரதான நிருவாகியொருவரிடம் ‘புதிது’ செய்தித்தளம் பேசி –

மேலும்...
மு.காங்கிரஸ் நிகழ்வுக்கு சாய்ந்தமருதில் வலுக்கும் எதிர்ப்பு: “ஏமாற்றிய ஹக்கீமுக்கு எமதூரில் இடமில்லை” என மக்கள் கொந்தளிப்பு

மு.காங்கிரஸ் நிகழ்வுக்கு சாய்ந்தமருதில் வலுக்கும் எதிர்ப்பு: “ஏமாற்றிய ஹக்கீமுக்கு எமதூரில் இடமில்லை” என மக்கள் கொந்தளிப்பு 0

🕔13.Sep 2023

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் பிரதான நிகழ்வை, அந்தக் கட்சியினர் – சாய்ந்தமருது பிரதேசத்தில் நடத்துவதற்கு ஒழுங்குசெய்துள்ள நிலையில், அப்பிரதேச மக்கள் அதற்கு பாரிய எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். சாய்ந்தமருது பிரதேசத்துக்கான உள்ளூராட்சி சபையொன்றை பெற்றுத் தருவதாக, முஸ்லிம் காங்கிரஸின் தற்போதை தலைவர்

மேலும்...
ஆசாத் மௌலானா ஏமாற்றி திருமணம் செய்து விட்டார்: சேனல் 4 ஆவணப்படம் வெளியான பின்னர், பெண் ஒருவர் வழக்குத் தாக்கல்

ஆசாத் மௌலானா ஏமாற்றி திருமணம் செய்து விட்டார்: சேனல் 4 ஆவணப்படம் வெளியான பின்னர், பெண் ஒருவர் வழக்குத் தாக்கல் 0

🕔12.Sep 2023

– பாறுக் ஷிஹான் – சேனல் 4 தொலைக்காட்சிக்கு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சாட்சியமளித்த ஆஸாத் மௌலானா போலியான ஆவணங்களை சமர்ப்பித்து  மோசடியான முறையில் தன்னை  திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண்ணொருவர் தாக்கல் செய்த வழக்கு இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் இன்று (12) விசாரணைக்காக எடுக்கப்பட்டது. குறித்த பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை தொடர்பில்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் செயற்பாடுகளும் ஒழுங்குமுறைகளும்’

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் செயற்பாடுகளும் ஒழுங்குமுறைகளும்’ 0

🕔9.Sep 2023

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் விஞ்ஞானத் துறை, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நாடாளுமன்றத்துடன் இணைந்து, பல்கலைக்கழக உள்வாரி இளங்கலைப்பட்டதாரி மாணவர்களுக்கான ‘அரசியல் செயற்பாடுகளும் ஒழுங்குமுறைகளும்’ பற்றிய குறுங்காலக் கற்கைநெறியொன்றை இன்றும் (09) நாளையும் (10) கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைத்துகின்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்

மேலும்...
நீதிமன்றங்களை அவமதிக்கும் சில பேர்வழிகள் குறித்து, நீதியரசர் திலீப் நவாஸ் எச்சரிக்கை

நீதிமன்றங்களை அவமதிக்கும் சில பேர்வழிகள் குறித்து, நீதியரசர் திலீப் நவாஸ் எச்சரிக்கை 0

🕔4.Sep 2023

– பாறுக் ஷிஹான் – நீதிமன்றத்தின் சட்டவாட்சியினையும் அதிகாரங்களையும் சில பேர்வழிகள் கேள்விக்குட்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளமையினை தாம் அவதானித்துள்ளதாக உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் மற்றும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி யூ.எல்.ஏ. மஜீத் ஆகியோரைக் கௌரவிக்கும் நிகழ்வு  சாய்ந்தமருது லீ

மேலும்...
‘இளைஞர் பரிசளிப்பு’ தேசிய போட்டிக்கு ஒலுவி்ல் சஹீம் தெரிவு

‘இளைஞர் பரிசளிப்பு’ தேசிய போட்டிக்கு ஒலுவி்ல் சஹீம் தெரிவு 0

🕔3.Sep 2023

ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம். சஹீம், இளைஞர் பரிசளிப்பு விழாவுக்கான ‘அபிநயம்’ போட்டியில் மாகாண ரீதியாக வெற்றி பெற்று , தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரதேசத்திலிருந்து, இளைஞர் பரிசளிப்பு விழாவுக்கான தேசிய மட்டப் போட்டியில் இம்முறை கலந்துகொள்ளும் ஒரே போட்டியாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 43ஆவது இளைஞர் பரிசளிப்பு விழாவுக்கான

மேலும்...
மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில், எழுத்து மூலம் தகவல் கோரிய அதிபருக்கு எதிராக முறைப்பாடு

மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில், எழுத்து மூலம் தகவல் கோரிய அதிபருக்கு எதிராக முறைப்பாடு 0

🕔1.Sep 2023

– பாறுக் ஷிஹான் – அரச பாாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் மாத விடாய் தொடர்பில், மாணவ தலைவியிடம் தகவல் கோரிய அதிபர்  தொடர்பில் விசாரணை  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கோட்ட பாடசாலை ஒன்றின் அதிபர், அடிக்கடி விடுமுறை எடுக்கின்ற பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் மாணவ தலைவியிடம்   தகவல் கோரியதாக, கல்முனை

மேலும்...
அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் திட்ட முன்மொழிவுகளுக்கான சிறு மானிய உதவி வழங்கும் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் திட்ட முன்மொழிவுகளுக்கான சிறு மானிய உதவி வழங்கும் ஒப்பந்தங்கள் கைச்சாத்து 0

🕔27.Aug 2023

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் ‘வில் கிளப்’ (WILL Club) மற்றும் பலத்தரப்பட்ட பங்குதாரர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று சனிக்கிழமை அம்பாறையிலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. இந் நிகழ்வில் உள்ளூராட்சிமன்ற பெண்கள் எழுதிய திட்ட முன்மொழிவுகளின் இறுதி வடிவம், பலத்தரப்பட்ட பங்கு தாரர்கள் குழு முன்னிலையில் சமர்ப்பிக்க பட்டு அவற்றுக்கான சிறு மானிய உதவிகள் வழங்குவதற்கான

மேலும்...
றமீஸ் அப்துல்லா: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதல் சிரேஷ்ட பேராசிரியரானார்

றமீஸ் அப்துல்லா: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதல் சிரேஷ்ட பேராசிரியரானார் 0

🕔27.Aug 2023

தென்கிழக்குப் பல்கலைக்கழக தலைமைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, சிரேஷ்ட பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை ஆரம்பித்த றமீஸ் அப்துல்லா, 1995ஆம் ஆண்டு தமிழ் சிறப்பு இளங்கலை பட்டதாரியானார். கற்கை முடிவில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் உதவி விரிவுரையாகக் கடமையாற்றும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறையை சேர்ந்த இவர், தென்கிழக்குப்

மேலும்...
அருகம்பே அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும்: அங்கு சென்ற ஜனாதிபதி தெரிவிப்பு

அருகம்பே அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும்: அங்கு சென்ற ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔25.Aug 2023

அருகம்பே சுற்றுலா வலயத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய துறைகளை அடையாளம் கண்டு, முறையான திட்டத்தின் ஊடாக அந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்